பாமகவின் நிறுவனரான ராமதாஸ், மத்திய அரசு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேம்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம் என்று தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
பா.ம.க நிறுவனரான ராமதாஸ் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் அமைக்கப்படுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், எனவே வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இத்திட்டங்களை ஆராய்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை தருகிறது.
தமிழ்நாடு அரசின் மீது இவ்வாறான குற்றச்சாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை, ஒரு மாதத்தில் இரண்டாம் தடவையாக தெரிவித்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு கடுமையாக இருக்கிறது. இது தொடர்பான உண்மையான நிலை என்ன? என்பது தமிழ்நாடு அரசால் விளக்கப்பட வேண்டும்.
சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச் சாலை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, இந்த திட்டம் தமிழகத்திற்கு அவசியமில்லை. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது, என்றாலும் அதனை தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.