5 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட கொரோனா உட்பட பல காரணங்களால் உலகம் மிகவும் மோசமாகவுள்ளதாக ஐ.நா சபையின் பொது செயலாளர் கூறியுள்ளார்.
உலகம் 5 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட கொரோனா, காலநிலை மாற்றம் போன்ற பல முக்கிய காரணங்களால் மிகவும் மோசமாகவுள்ளதாக தனது 2 ஆவது ஆண்டு பதவி காலத்தை தொடங்கிய ஐ.நா சபையின் பொது செயலாளரான ஆன்டனியோ கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, ஐ.நா சபையில் பொதுச் செயலாளருக்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து தனது முதலாமாண்டு பதவிக்காலத்தில் கொரோனா மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பல நடவடிக்கைகளை சமாளிக்கும் முயற்சியில் என்னுடைய முன்னுரிமை அப்படியே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.