தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு எளிதாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. முழுமையாக குடிமக்களுக்கு இணையதளம் மூலமாக திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் பிரவுசிங் சென்டர்கள் மூலம் புதிதாக 36 நபருக்கு இ-சேவை மையம் அமைப்பதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இ-சேவை 2.0 வெகு விரைவில் நடைமுறைக்கு வந்ததும் தற்போது உள்ள இணையதள பிரச்சனைகள் சீரமைக்கப்படும். தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இணையத்தள பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.