விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது .திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்க கூடிய சூழ்நிலை அமையும். இன்று சின்ன சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும் படி நடக்கும். அரசியல் துறையினருக்கு சிலர் நல்ல பலன்கள் ஏற்பட்டாலும் சிறு மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்யுங்கள்.
மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் இன்று பணக்கடன் மட்டும் வாங்க வேண்டாம். இன்று உடல் நிலையைப் பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. மனம் அமைதியாக இருக்கும். ஓய்வும் உங்களுக்கு கிடைக்கும். அது போலவே இன்று வெளியூர் பயணம் செல்லும்போது உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்