தமிழகம் முழுவதும் நேற்று கொரோனாவால் புதிதாக 29,870 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனாவால் மேலும் 30,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 33 பேர் இறந்துள்ளதாகவும், 1,94,697 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பதாகவும், 23,372 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,03,410-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 37,178-ஆகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,71,535-ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 2,377 பேரும், கோவையில் 3,886 பேரும், சென்னையில் 6,452 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.