Categories
தேசிய செய்திகள்

COWIN இணையதளம்…. தனிநபர் தகவல்கள் வெளியாகவில்லை…. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

Co-WIN இணையதளத்திலிருந்து ஏராளமான மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அப்படி எந்த ஒரு தனிநபரின் தகவலும் Co-WIN இணையதளத்திலிருந்து கசியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்க பயன்படுத்தப்படும் Co-WIN செயலியிலிருந்து தகவல்கள் கசிந்தன என்று வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கமளித்துள்ளது.

அதில் Co-WIN இணையதளத்தில் சேமிக்கப்பட்ட தனிநபரின் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் Co-WIN இணையதளம் மிகவும் பாதுகாப்பானது என்றும், பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் பாதுகாப்பாக உள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயனாளிகளிடமிருந்தும் முகவரி போன்ற ஆவணங்களையோ அல்லது ஆர்டி.பிசிஆர் சோதனை முடிவுகளை சேகரிக்காததால், இணையதளத்திலிருந்த ஆவணங்கள் கசிந்துள்ளதாக வந்த தகவல் நியாயமானது அல்ல என்றும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |