Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள் … சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

 பல்வேறு கோரிக்கைளை  வலியுறுத்தி சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டம் ஆனது மாவட்டத்தலைவர் ஆழ்வார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் ஊதியத்தில் 10% ஆபத்துக்கால ஊதியமாக  வழங்க வேண்டும்  உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் ஆனது நடைபெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |