Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “பழக்க வழக்கங்கள் விரிவடையும்”.. அடுத்தவர் பேச்சைக் கேட்க வேண்டாம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாக கூடிய சூழல் இருக்கும். வரவு  போதுமானதாகவே அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள் இன்று வலிய வந்து உறவாடுவார்கள். இன்று மற்றவர்களால் அமைதியின்மை ஏற்படலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதை குறைப்பது மட்டும் நல்லது.

குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து பேசுவது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தூர தேசத்து நண்பர்களை சந்திக்கவும் கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |