செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயணன் திருப்பதி, தமிழகத்தில் கூட தொடர்ந்து நாம் பார்த்தோம், முதலில் ஒரு ஆறு மாதங்களுக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, ஆளுங்கட்சியாக வந்தபோதும் சரி தடுப்பூசியே கிடைக்கவில்லை என்பது போல் அதன் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 8 கோடியே 98 லட்சத்து 38 ஆயிரத்து 46 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என்பது நல்ல ஒரு செய்தி.
மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று சொன்னவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள், முழுக்க முழுக்க மத்திய அரசு கொடுக்கக்கூடிய, மத்திய அரசு இலவசமாக கொடுத்தால் இல்லை, மாநில உரிமைகளை பறிக்காதீர்கள் எங்களுக்கு நாங்கள் தான் வாங்குவோம் என்றார்கள். ஆனால் அப்படி ஒரு பிரச்சனை சரி நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும்பொழுது அது ஏன் மத்திய அரசு கொடுக்க முடியாதா என்று கேட்டார்கள்.
இன்றைக்கு முதல் தடுப்பூசி 5 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 335 பேர் அதாவது தகுதியானவர்கள் யாருக்கு ? 18 வயதுக்கும் மேலாக இன்று 15 லிருந்து 18 வயதிற்கு உள்ளாக இந்த அளவிற்கு தமிழகத்திற்கு மிகச்சிறப்பான விஷயத்தை நாம் செய்திருக்கிறோம். இதில் இரண்டு மூன்று விஷயங்கள் இன்றைக்கு நம்ம தூத்துக்குடியை சேர்ந்த மோகன் சி லாசரஸ் என்கின்ற ஒரு நபர் காணொளியில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் கிறிஸ்துவ மக்களிடையே பைபிளில் சொன்னதாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதனால் பல பிரச்சனைகள் உருவாகும் என்றும், மருத்துவர்களை காணாதீர்கள் என்றும், தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். பல பேர் மீது வழக்கு தொடர்கின்ற அரசு, தொற்று நோய் பரவுவதை அதுகுறித்து வதந்தியை மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக் கட்டையாக, தடையாக, மக்களை தூண்டிவிடும் வகையில் மோகன் சி லாசரஸ் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உடனடியாக அவரை தொற்றுநோய் சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினுடைய… தமிழக அரசினுடைய உத்தரவு இருக்கிறது அதன் அடிப்படையில் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசினுடைய முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுடைய கடமையாகும். ஏனென்றால் மதத்தின் பெயரால் இது போன்ற வதந்திகளை பரப்புவது, உயிரை பலி கொடுப்பதற்கு சமமான விஷயம். மதத்தின் பெயரால் நடக்கக்கூடிய இந்த மதவாத விஷயங்களை நாம் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.