உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
தி மார்னிங் போஸ்ட் தகவலின்படி உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 76 சதவிகித பேரின் ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் இமானுவேல் லோபஸ் உள்ளார். இவருக்கு 66 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 44 சதவிகிதம் பேரின் ஆதரவோடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவிகிதம் பேரின் ஆதரவோடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் மோடி 83 சதவிகிதம் ஆதரவைப் பெற்றிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு அது 63 சதவீதமாக சரிந்தது. பின்னர் தற்போது இந்த ஆண்டு மோடிக்கான ஆதரவு 76 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.