மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நன்மை ஏற்படும் நாளாக இருக்கும். நாள்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினருடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம். வாகனங்களால் செலவு ஏற்படும்.
நண்பரிடமிருந்து பிரிவு உடல் சோர்வு போன்றவை உண்டாக கூடும் பார்த்துகொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அதேபோல நண்பர்களுக்காக நீங்கள் எந்தவித ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொள்ளாதீர்கள். இந்த விஷயத்திலும் ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்