கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.அன்பழகன், எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரும், கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் அவர்கள் நடந்து முடிந்த பொங்கல் பரிசு குறித்து உண்மை நிலையை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்து கூறினார்.
கிட்டத்தட்ட 1350 கோடியிலே 2,15,000 குடும்ப அட்டைகளுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்குகிறேன் என்று ஆளுகின்ற திராவிட முன்னேற்ற கழக அரசு அறிவித்தது. அதிலே கிட்டத்தட்ட 500 கோடி இன்றைக்கு தமிழ்நாட்டில் எதையுமே வாங்காமல் அண்டை மாநிலங்களில் வாங்கி 500 கோடி ஊழல் செய்ததை வெட்ட வெளிச்சமாக்கினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியபடுத்தினார் எதிர்க்கட்சி தலைவர் திரு எடப்பாடியார் அவர்கள். இதை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இங்கே சோதனை என்ற பெயரிலே சோதனை நடத்தினார்கள். 500 கோடி ஊழல் மட்டுமல்லாமல், கொடுத்த பொருட்கள், தரம் இல்லாமல் இருந்ததையும், அதே நேரத்தில் 21 பொருட்கள் முழுமையாக மக்களுக்கு சென்று அடையவில்லை என்பதையும், இன்றைக்கு மக்கள் முழுவதும் தெரிந்து கொள்கின்ற நிலையிலே எடுத்துக் கூறினார் எடப்பாடியார். இதை மறைப்பதற்காக சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.