தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.