Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் வருமா ? வராதா ? கோர்ட்டில் ஒன்னு சொல்லுறீங்க – திமுகவிடம் பதில் கேட்கும் பாஜக ..!!

நகர்ப்புற தேர்தல் குறித்து நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டபின்பு பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு மறுபடியும் முதல் அறிவித்த வார்டுகள் உடைய விபரங்கள் படி மாற்றி அறிவித்திருக்கிறார்கள், இதில் என்ன ஆகிவிட்டது என்றால் சிறிய குழப்பம் சைதாப்பேட்டையில் பார்த்தீர்களென்றால்…

ஆண்கள் நிற்கிறார்கள்,  பெண்கள் கிடையாது. மயிலாப்பூரில் பார்த்தால் வெறும் பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.அப்புறம் அந்த பகுதியில் இருக்கின்ற சதவிகிதம் எப்படி சரியாக வரும். அதனால் அதை திருப்பி மறுபரிசீலனை செய்யுங்கள் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறோம். அதேபோன்று தேர்தலைப் பொருத்தவரை உச்சநீதிமன்றத்தில் ஒன்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்,

இங்கே அறிவிக்க மாட்டேங்குறீங்க, வருமா ? வராதா என்ற ஒரு கேள்வி தேர்தல் தேதி எப்ப வரும் என்று ஏதோ ஒரு சின்ன விவாதமாக இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்… மிகப்பெரிய வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். கொரோனா அதிகமாகிக் கொண்டிருக்கிறது தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தேதி அறிவிக்கப் போவதாக சொல்லி இருக்கிறார் என்ற தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தேர்தல் அறிவிப்பை சம்பிரதாயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அறிவித்து உடனே மனுத்தாக்கல் தொடங்குங்கள் அப்படி செய்யாதீர்கள், ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்காவிட்டால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அதையும் நாங்கள் ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |