Categories
தேசிய செய்திகள்

“ஜனவரி 31-ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!”…. 5 மாநிலங்களுக்கு…. தேர்தல் ஆணையம் அதிரடி….!!!!

வருகின்ற பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் உத்ரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் பிரச்சாரங்களில் கொரோனா காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 15-ஆம் தேதி தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் ஐந்து மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் ஜனவரி 22-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதேபோல் உள் அரங்குகளில் 50% இருக்கை அல்லது 300 நபர்களுடன் மட்டுமே கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றுடன் தேர்தல் ஆணையம் அறிவித்த அந்த கால கேடு முடிவுக்கு வரும் நிலையில் மீண்டும் ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 500 பேர் வரை தேர்தல் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 பேர் மட்டுமே வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 10 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |