Categories
உலக செய்திகள்

FLASH: “காலவரையற்ற தடை”…. வேதனையில் சுற்றுலா பயணிகள்…. அரசின் அதிரடி உத்தரவு…!!

பெருவிலிருக்கும் 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மச்சு பிச்சு என்னும் உலகப் புகழ் வாய்ந்த மலை நகரத்திற்குள் நுழையும் பாதை முழுவதும் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் அங்கு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவிலிருக்கும் 15-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலக புகழ்வாய்ந்த மச்சுபிச்சு என்னும் மலைப் பகுதியை காண்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை புரிவது வழக்கமாக உள்ளது.

இந்த மலைப்பகுதி முதன்முதலாக தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்திலுள்ள கிளிமாஞ்சாரோ என்னும் பாடலில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த மலைப்பகுதிக்கு செல்லும் பாதை முழுவதும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளது.

அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள பல பகுதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் பெரு அரசாங்கம் மச்சு பிச்சு மலைப் பகுதிக்கு செல்ல காலவரையற்ற தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Categories

Tech |