கடந்த சில நாட்களுக்கு முன்பு கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிரச்சனைகள் எழ வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன் இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அன்பழகனின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அதில் அவர் “திமுக அரசு பொறுப்பேற்றது முதலே அதிமுகவை அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை ஏவிவிட்டு அதிமுக மீது அவதூறு பரப்ப திமுகவிற்கு வெட்கமாக இல்லையா…? தைரியமிருந்தால் ஸ்டாலின் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை நடத்தட்டும். இதுபோன்ற லஞ்ச ஒழிப்பு சோதனைகளுக்கு எல்லாம் நாங்கள் பயந்து விட மாட்டோம்.
தைரியமிருந்தால் என் வீட்டில் வந்து சோதனை நடத்தட்டும் எவ்வளவு சோதனைகளை நாங்கள் பார்த்துவிட்டோம் இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்…!” என பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதனால் கொந்தளித்துப் போன திமுக நிர்வாகிகள் பலர் ஸ்டாலினிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமாரை வெளுத்துக் கட்ட முடிவு செய்த திமுக ஏற்கனவே அவர் மீது அரசல்புரசலாக பேசப்பட்ட ஒரு ஆடியோ பதிவு கடந்த ஆட்சியில் வெளியானது. அந்த ஆடியோவில் பேசி இருந்த பெண் யார் என்பது பற்றி திமுக நோண்டி வருகிறது. எனவே ஜெயக்குமாருக்கு எப்போது வேண்டுமானாலும் அதிமுக அரசு ஆப்பு வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.