ஹோண்டுராசில் என்ற நாட்டில் தாராளவாத கட்சியை சேர்ந்த சியோமாரா கேஸ்ட்ரோ என்பவர் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அடுத்த வாரத்தில் கேஸ்ட்ரோ அதிபர் பதவி ஏற்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
அதில் சியோமாரா கூட்டணி கட்சியை சேர்ந்த லூயிஸ் ரெடோன்டோ என்பவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தாராளவாத கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் எதிர் தரப்புக்கு வாக்களித்து விட்டனர். இதனால் நாடாளுமன்ற தலைவராக ஜார்ஜ் காலிக்ஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் கோபமடைந்த லூயிஸ் ரெடோன்டோவின் ஆதரவு உறுப்பினர்கள் திடீரென அவருக்கு எதிராக வாக்களித்ததால் சக ஆளும் கட்சி உறுப்பினர்களை மிக மோசமாக தாக்கினர். பின்னர் சக ஆளும் கட்சியினரும் திருப்பி தாக்கியுள்ளனர். இவ்வாறு நாடாளுமன்றத்தில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. பின்னர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.