தஞ்சை மாணவி மரணத்தால் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
தஞ்சை பள்ளி மாணவி மரணத்தால் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல் பட்டி கிராமத்தில் தூய இருதய மேரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா. இவர் கடந்த சில தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாணவியின் மரணத்திற்கு காரணம் விடுதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட மன உளைச்சல் மற்றும் தொந்தரவுகளே ஆகும் என கூறியுள்ளனர்.
பாஜகவின் அரசியல் அருவருப்பானது… pic.twitter.com/sfbt1nAAnK
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) January 22, 2022
மேலும் மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர், அந்த வாக்குமூலத்தில் மாணவி ஹாஸ்டலில் தனக்கு கொடுக்கப்பட்ட மன உளைச்சலால் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் பாஜகவினர் மாணவியின் தற்கொலைக்கு காரணம் மதமாற்றம் நிர்பந்தம் தான் என கூறியுள்ளனர். மாணவியை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்திய காரணத்தினால் மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறியுள்ளனர்.
இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை ஒரு ஏழைப் பள்ளி மாணவியின் மரணத்தில் இவ்வாறு அரசியல் ஆதாயம் தேடுவது நல்ல கட்சிக்கும் நிர்வாகிகளுக்கும் அழகல்ல. மேலும் மாணவியின் பெற்றோரை இந்திய மாணவர் சங்கத்தினர் சந்திக்க முயற்சித்தபோது பாஜகவினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மதமாற்றம் தான் மாணவியின் மரணத்திற்கு காரணம் என்றால் எதற்கு பாஜகவினர் அவர்களை சந்திக்க விடாமல் தடுக்க வேண்டும்..? இவை அனைத்தும் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் பாஜகவின் சதித்திட்டம். உயிரிழந்த மாணவி உயிரிழப்பு மற்றும் நியாயம் கிடைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்…!” இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.