Categories
சினிமா

ஜில்….! ஜில்….! பனியில் சறுக்கி விளையாடும் சமந்தா….! விவாகரத்துக்குப் பின் வேற லெவல் என்ஜாய்மென்ட்….!!!!

நடிகை சமந்தா தனது தோழிகளுடன் சுவிட்சர்லாந்துக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவரது திருமண வாழ்க்கை கடந்த அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. இருவரும் மனம் ஒத்து பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் வெளியிட்டனர். விவாகரத்துக்குப் பின்னர் சமந்தா தனது தோழிகளுடன் ஆன்மீக சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிஷிகேஷ் சென்று திரும்பிய சமந்தா தனது நெருங்கிய தோழி சில்பா ரெட்டியுடன் சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தில் சமந்தா எடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் சமந்தா விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தற்போது நான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள யசோதா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |