செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, கடந்த சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவ மற்றும் மருத்துவ மேல் படிப்பில், பல் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஏதோ திராவிட முன்னேற்ற கழகம் தான் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது போன்ற ஒரு தவறான ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. பொய் சொல்லி உண்மைக்கு புறம்பான தகவல்களை திராவிட முன்னேற்ற கழகம் சொல்வது வாடிக்கையாகிவிட்டது.
1986 இல் துவங்கிய இந்த அகில இந்திய ஒதுக்கீடு அது பயணித்து உச்ச நீதிமன்றத்தினால் முடிவு செய்யப்பட்டது. அது பயணித்து 2007-ல் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வந்தபோது அன்றைக்கு திமுக அங்கம் ஒழித்த காங்கிரஸ் கூட்டணி அரசு இது அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும் என்று சொல்லி இருந்தால், உத்தரவு போட்டு இருந்தால் பிரச்சினை இல்லை. அதே போன்று 2008இல் அபேநாத் வழக்கில் தீர்ப்பு வந்தபோது அப்போது இவர்கள் இல்லை இல்லை நாங்கள் உறுதியாக இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம் என்று சொல்லி இருந்தாலும் பிரச்சனையில்லை.
ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, சமூகநீதியை மறந்துவிட்டு 2015இல் எங்களுடைய பாஜக ஆட்சிக்கு வந்த உடனேயே வழக்கில் நாங்கள் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தயார் என்று தெளிவாக மத்திய பாஜக அரசு சொல்லியதை அடுத்து…. ஏனென்றால் ஏற்கனவே இருந்த அபேநாத் வழக்கில் எஸ்சி, எஸ்டி அந்த பிரிவினை தவிர வேறு யாருக்கும் இந்த இட ஒதுக்கீடு இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அப்போது நாம், நீங்கள் உத்தரவிடுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம், எங்களுடைய கொள்கை முடிவு என்று நாம் தான் கூறியிருக்கிறோம்.
சென்ற வருடம் இதே மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு முடிந்தவுடன் நீதிமன்றத்திற்கு செல்கிறது திராவிட முன்னேற்ற கழகம், பாமக போன்ற கட்சிகள். ஆனால் திமுகவின் உடைய இந்த வழக்கில்… அவர்கள் தொடுத்த வழக்கில், மத்திய அரசுதான்… பாரதிய ஜனதா கட்சி அரசு தான் நாங்கள் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று சொன்னோம். அதன் அடிப்படையில் வந்த தீர்ப்புதான் மாண்புமிகு நீதியரசர் கொடுத்த தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில்…. அதாவது மத்திய அரசு தயாராக இருக்கிறது அதனால் எவ்வளவு விழுக்காடு என்பதை ஒரு குழு அமைத்து முடிவு செய்யுங்கள் என்று சொன்னவுடன் மத்திய அரசு குழு அமைத்தது, குழு அமைத்து அந்த பரிந்துரையின்படி மத்திய அரசு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. இதுதான் இட ஒதுக்கீட்டிற்கான விஷயம்.
ஆனால் இதில் எங்கே இருந்து திமுக வந்தது? எங்கே இருந்து சமூகநீதி காத்தது ? மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழ்நாட்டில் நாங்கள்தான் நடத்துவோம் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. மண்டல் ஆணையத்தை நியமித்தது மரியாதைக்குரிய அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களும், அத்வானி அவர்களும் அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் ஜனதா கட்சி எங்களுடைய ஆட்சியில்தான் மண்டல் ஆணையத்தை நியமித்தோம் என தெரிவித்தார்.