தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கான இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயங்காது. டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியும் தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் வெளியே சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அதையும் மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.