Categories
சினிமா

பீட்ஸ் படத்துக்கு ஆப்பு…. “போட்டி போட காத்திருக்கும் 2 பெரிய படங்கள்”…. எந்தெந்த படங்கள் தெரியுமா?….!!!!

நடிகர் விஜய்யின் பீட்ஸ் திரைப்பட வெளியீட்டு அன்று 2 பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் பீட்ஸ் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் தங்களது வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளன. இந்நிலையில் விஜய்யின் பீட்ஸ் படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதே தினத்தில் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது. ஏற்கனவே கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி சினிமா உலகில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மாபெரும் வெற்றி காரணமாக கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமும் மிகப்பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் பட்டா திரைப்படமும் அதே தினத்தில்தான் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யாவும் அமீர்கானுடன் நடித்துள்ளார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு படங்களின் வெளியிட்டால் விஜயின் படத்தில் வசூல் பாதிக்கப்படலாம் என சினிமா உலகில் பேசப்படுகிறது.

Categories

Tech |