மதுபோதையில் நண்பர்கள் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் அர்ஜூனப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான பழனி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பழனி அதே பகுதியில் வசிக்கும் விஜய், சாமி ஆகியோருடன் இணைந்து நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டு பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது 3 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதனை அடுத்து சாமி மது போதையில் பழனியை கீழே தள்ளி விட்டு அவரது தலையில் கல்லை போட்டுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாமி மற்றும் விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.