2 1/2 வயது குழந்தையை துன்புறுத்திய குற்றத்திற்காக தாத்தாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருவம்பட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவகுமார் தனது 2 1/2 வயது பெண் குழந்தையை முனுசாமியிடம் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முனுசாமி குழந்தைக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிந்ததும் சிவகுமார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது குழந்தை உடலில் காயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்தது. இதனையடுத்து சிவக்குமார் தனது குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனுசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.