Categories
மாநில செய்திகள்

“கொரோனா தடுப்பூசி சான்றிதழ்”…. தமிழக மக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…..!!!!!

சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய கொரோனா பரிசோதனை ஆய்வக வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் போன்றோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தபோது, “ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதிலும் மொத்தம் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் இருக்கின்றன. இதில் 2 ஆயிரத்து 580 ஊராட்சிகளில் 100 % முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 121 நகராட்சிகளில், 23 நகராட்சிகளில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 94.19 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணையும், 74.11 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதே கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. ஆகவே இறப்பு விகிதத்தை குறைக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே, செலுத்தியதாக சான்றிதழ் எடுத்து வைர்த்திருப்பவர்களை கண்டறிவது கடினமான ஒன்று ஆகும்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் தடுப்பூசி முகாமை அரசு நடத்துகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு தடுப்பூசியின் விலை ரூ 1,100 இருக்கும் நிலையில், மக்களை காப்பாற்றுவதற்காகவே அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஆகவே மக்கள் தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்கவும் வேண்டாம், வாங்கவும் வேண்டாம். இவ்வாறு போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் பாதிப்பு 2 நாட்களாக குறைந்து வந்தாலும், உள்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |