Categories
உலக செய்திகள்

“ஏமனில் பயங்கரம்!”…. மொத்தமாக இடிந்து தரைமட்டமான சிறை…. உயிரிழப்பு எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு….!!!

ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏமனில் கடந்த 2014 ஆம் வருடத்திலிருந்து அதிபர் மன்சூர் ஹாதியின் தலைமையிலான அரச படையினரும், ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி படைகளும் மோதிக்கொண்டிருக்கிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு, சவுதி அரேபியா தலைமையில் இயங்கும் அரபு நாடுகளில் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது.

எனவே, கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஏமனின் மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறைச்சாலை மீது வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் முழு கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இக்கொடூர தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கட்டிடங்களின் இடிபாடுகளில் பலர் மாட்டியிருப்பதோடு, காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |