நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவி வருகிறது. இந்த அலையில் மருத்துவமனை சேர்க்கைகள், இறப்புகள் குறைவாகவே இருக்கின்றன. கொரோனா 3-வது அலை தொடர்பாக டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை ஒரு ஆய்வு நடத்தியது. இதையடுத்து கடந்த 20-ந்தேதி வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் இருப்பதாவது, கொரோனா 3-வது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களும்தான். இறந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட இணை நோயுடன் போராடி வந்தவர்கள் ஆவார்கள். இதனிடையில் சிறுவர், சிறுமியர் இறப்பு இல்லை. எங்கள் மருத்துவமனையில் 82 பேர் இறந்துள்ளனர்.
இதில் 60 சதவீதம் நபர்கள் தடுப்பூசி போடாதவர்களாக இருக்கின்றனர். 41 சிறுவர் சிறுமியர் மருத்துவமனையில் கொரோனா மீட்பு சிகிச்சைக்கு சேர்ந்தனனர். இந்த பிரிவில் இறப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் வென்டிலேட்டர் வசதியுடனும் சிகிச்சை பெற்றனர். கொரோனா முதல் அலையில் உயிரிழப்புகள் 7.2% , 2-வது அலையில் 10.5 %, 3-வது அலையில் 6 % என்று அதில் கூறப்பட்டுள்ளது..