திருவனந்தபுரத்தில் பிரபாகரன் காணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினர் மகளை 6 வயது முதல் கடந்த 7 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இது தொடர்பாக தனது பள்ளி ஆசிரியரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். இந்நிலையில் 3 ஆண்டுக்கு பிறகு தற்போது குற்றவாளி பிரபாகரனுக்கு 27 வருடம் கடுங்காவல் சிறை, ரூபாய் 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் இதுதான் நீதியா?… இந்த நீதி போதுமா?… என்று பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுந்துள்ளது.