Categories
தேசிய செய்திகள்

வரும் 29ஆம் தேதி மீண்டும் பள்ளிகள்?…. மாநில கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தற்போது குறைந்து இருப்பதை அடுத்து அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெங்களூர் நகரில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருவதால் அங்கு பள்ளிகள் தற்போது திறக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இதனிடையில் கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் உள்ள பள்ளிகளை ஜனவரி 29ஆம் தேதி மீண்டும் திறப்பது தொடர்பாக கர்நாடக அரசு தெரிவிக்கும் என்று கூறினார். அதன்பின் பெங்களூருவைத் தவிர மாநிலம் முழுவதும் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.

மாநிலத்தின் பிற பகுதிகளிலுள்ள பள்ளிகளை மூடுவது தொடர்பாக உதவி ஆணையர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களுக்கு தெரிவிக்கப்படும். கொரோனா பாதிப்புகள் குறைவாக பதிவாகினால் குறிப்பிட்ட பள்ளி 3 நாட்களுக்கு மூடப்படும். ஆனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பள்ளி 7  நாட்களுக்கு மூடப்படும் என்று கூறினார். இதற்கிடையில் 6 முதல் 15 வயதுக்குட்பட்ட 5,33,104 மாணவர்களுக்கு கொரோனா சோதனை உட்படுத்தப்பட்டதில் நேர்மறை விகிதம் 5.94 சதவீதமாக இருக்கிறது. 6 மாவட்டங்களில் 9 சதவீதம் அல்லது அதற்கு மேலும் 13 மாவட்டங்களில் இது 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது. ஆனால் பெங்களூரு நகர்ப்புறத்தில் நேர்மறை விகிதம் 14.12 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 8.84 சதவீதமாகவும் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |