Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கல…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து  கொரோனா 2 தவணை தடுப்பூசிகளையும் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனிடையில் புனேயில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரம் தொடர்பாக நேற்று அதிகாரிகளுடன் மாவட்ட பொறுப்பு மந்திரியும், துணை முதல் மந்திரியுமான அஜித் பவார் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புனே மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு எடுக்கவில்லை என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து வரும் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அஜித்பவார் தெரிவித்துள்ளார்.

புனே மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நீச்சல் குளம் , மைதானங்கள் திறக்கப்பட இருக்கிறது. மேலும் லோனவாலா, சின்காகாத் ஆகிய சுற்றுலா தலங்களில் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து சனி, ஞாயிறுக்கிழமைகளில் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் 51% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், ஊரகப்பகுதிகளில் 75 % சிறுவர்கள் முதல் டோஸ் போட்டு இருப்பதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |