Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… காதலன் கண்முன்னே…. 80 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்…!!

இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் சுமார் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில், அவர் உயிர்பிழைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரத்தில் வசிக்கும் 26 வயதுடைய Kara Sutton என்ற பெண் தன் காதலனுடன் விடுமுறையை கொண்டாட நார்த் வேல்ஸிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருக்கும் நீர்வீழ்ச்சிக்கு மிதிவண்டியில் சென்ற அவர், மலை உச்சியில் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுமாறி சைக்கிளோடு சுமார் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதனால், அதிர்ந்துபோன அவரின் காதலர், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டிருக்கிறார். உடனடியாக அங்கிருந்த மருத்துவ பணியாளர் ஒருவர், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், உயிருக்கு எந்த ஆபத்துமின்றி சிறிய காயங்களுடன் தப்பினார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |