இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் பகுதியில் வசிக்கும் அவினாஷ் டோஹர் என்ற இளைஞர் மொரோக்கோவை சேர்ந்த பட்வா என்ற பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகு, இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவினாஷ் மொரோக்கோ நாட்டிற்கு சென்று பட்மாவின் குடும்பத்தினரிடம் திருமணம் பற்றி பேசியிருக்கிறார்.
முதலில் அவரின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பட்வாவின் தந்தை, “என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் நிரந்தரமாக மொரோக்கோ நாட்டிற்கு வர வேண்டும்” என்று நிபந்தனை விதித்திருக்கிறார். ஆனால், அவினாஷ், நான் எங்கள் ஊரில் தான் இருப்பேன் என்றும் கண்டிப்பாக மதம் மாற மாட்டேன் என்றும் உறுதியாக கூறிவிட்டார்.
மேலும், பட்வாவை மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்த மாட்டேன் என்றும் கூறினார். அதன்பிறகு இருவரும் காதலில் உறுதியாக இருப்பதை உணர்ந்த, அவரின் தந்தை திருமணத்திற்கு சம்மதித்தார். இவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடந்திருக்கிறது.