Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வு”… தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து திறக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இதனைதொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்துள்ளார். அதாவது, மாணவர்களின் பாதுகாப்பு கருதி 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அறிவித்ததால் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் கட்டாயம் நேரடி முறையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் ஜனவரி 19ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இணையதளம் மூலம் பதிவேற்றுவதால் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்தனர். இதனால் ஜனவரி 31ஆம் தேதி வரை கூடுதல் அவகாசத்தை அரசு வழங்கியுள்ளது. இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் மேலும் இது போன்ற கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |