ஊர் தலைவரின் ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீரிப்பூர்வலசை கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். கிராம ஊர் தலைவரான இவர் விவசாயம் செய்து ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு இரவில் வீட்டிற்கு அருகே உள்ள தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது நாகராஜனின் 4 ஆடுகள் காணாமல் போயிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு நடத்திய விசாரணையில், அந்த பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சரக்கு வாகனங்களும், கார்களிலும் ஆடுகளை திருடிச் செல்வது வாடிக்கையாக இருந்து வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.