தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவுநேர ஊரடங்கும், வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடகும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் சுற்றுலா தலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரத்தில் ஏசி வசதியுடன் இயங்கும் கடல்சார் அருங்காட்சியகமும், குறுகிய வழியுடைய கலங்கரை விளக்கமும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.