டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர். இதனால் இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவரிடமும் ஸ்கேனிங் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் ஆசனவாய் மூலமாக மலக்குடலில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து ஃபிளைடுபாய் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு வந்த இவர்கள், டெல்லியில் தரையிறங்கி பின்னர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்ததாக பெங்களூரு தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் தலா 430 கிராம் தங்கப் பசையை தங்களது மலக்குடலில் வைத்து இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக 866 கிராம் கொண்ட தங்கத்தின் மதிப்பு 41.6 லட்சம் என்றும் கூறப்படுகிறது. தற்போது தங்கம் கடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.