Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு லாரி…. அலறிய பயணிகள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று ஊட்டி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து பைக்காரா பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஊட்டியில் இருந்து நடுவட்டம் நோக்கி வந்த சரக்கு லாரி அரசு பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |