Categories
உலக செய்திகள்

அமெரிக்கா செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டிற்குள் வரும் அனைத்து கனடா மக்களும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க அரசு இன்றிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் அனைத்து கனடா மக்கள் மற்றும்  அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

அத்தியாவசிய காரணங்கள் அல்லது தேவையற்ற காரணங்களாக என்று எதுவாக இருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கான ஆதாரம் காண்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதிமுறையிலிருந்து அமெரிக்க குடிமக்கள் மற்றும் அந்நாட்டின் வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |