Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ தேர்ச்சியா….? ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள Legal Officer, Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி (RBI)

பணி : Legal Officer, Manager, Assistant Librarian, Architect மற்றும் Curator

மொத்த காலிப் பணியிடங்கள் : 14

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/rbidec21/ எனும் இணையதளத்தின் மூலம் 04.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 .

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rbi.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |