Categories
அரசியல் மாநில செய்திகள்

கொலை செய்துடுவேன்… வீடு புகுந்து வெட்டுவேன்…. பாஜக நிர்வாகிக்கு மிரட்டல் …. தமிழகத்தில் பெரும் பரபரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, அரசினுடைய திட்டங்களை தாராளமாக விமர்சனம் செய்யலாம். ஆனால் அதனை 5 வயது குழந்தை கிட்ட கொடுத்து எமோஷனல் பிளாக்மெயில் செய்ய கூடாது, குழந்தையும் பிளாக்மெயில் செய்ய கூடாது, மக்களிடம் தவறான செய்திகளையும், நீங்க கேட்பதை பார்த்தா என்னமோ திமுக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்று சொல்ற மாதிரி தெரியுது.

திமுக இப்போ பாஜகவை சேர்ந்த 60, 70 பேர் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது, விமர்சனம் செய்ததற்காக… இல்லை என்று மறுக்க முடியுமா ?  நான் என்ன கேட்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலினை  விமர்சனம் செய்தால் கைது, ஆனால் பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தால் அதற்கு பெயர் கருத்து சுதந்திரமா? இது தான் நாம் கேட்கின்ற கேள்வி. யார் செய்தாலும் தவறுதான்.

முதலமைச்சரை யாரு தரம் தாழ்ந்து பதிவு செய்தாலும் தவறு தான்.இன்னைக்கு கோயமுத்தூர்ல, திருப்பூர்ல ஒரு நான்கு நாட்கள் ஆகிவிட்டன, நாங்கள் புகார் கொடுத்து, இன்றுவரை கைது செய்யவில்லை,  நடவடிக்கை எடுக்கவில்லை… பிரதமர் குறித்தும், அமைச்சர் ஸ்மிரிதிரணி குறித்தும் மிக மோசமாக பதிவு செய்தார்களை….

என்னை கொலை செய்து விடுவேன் என்றும் வீடு புகுந்து வெட்டுவேன் என்றும் மிரட்டியதற்கு நான் புகார் கொடுத்திருக்கிறேன். இதுவரை கைது செய்யவில்லை. அப்படி என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை என்றுதானே அர்த்தம், அப்படி என்றால் தமிழ்நாட்டில் திமுகவை தவிர யாரு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்றுதானே அர்த்தம் என தெரிவித்தார்.

Categories

Tech |