அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வேலு, குப்பு மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் வீட்டில் வைத்திருந்த பீரோ, இரும்பு பெட்டிகளை உடைத்து கொலுசு, லேப்டாப், 2000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக 3 பேரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்டு தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.