மாந்தோப்பில் கேட்பாரற்று கிடந்த ஆண் ஒருவரின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.சி.எஸ் மெயின் ரோட்டில் இருக்கும் பங்களா கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாந்தோப்பில் 45 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து இறந்தவர் மாநிறம் உடையவர், நீல நிற சட்டையும் வெள்ளை கலரில் நீல நிற கோடு போட்ட லுங்கியும் அணிந்து இருந்திருக்கிறார். இவர் யார் எந்த ஊரில் வசித்தவர் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.