திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பழிவாங்குகின்ற செயலாக பார்க்கின்றோம். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் மீதும், தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போடுவது,
முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி சோதனை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையை பயன்படுத்தி, இந்த செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. இதெல்லாம் இவர்கள் முறைகேடுகளை மறைப்பதற்காக தினம் திராவிட முன்னேற்ற கழக அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது என தெரிவித்தார்.