Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 மாதத்தில் அவ்வளவு கொடுமை…. தரையில் உருண்ட போலீசின் மனைவி …. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசின் மனைவி காவல்நிலையம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடேந்திரபுரம் பகுதியில் ராஜசிம்மன் என்கின்ற நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைபடுத்துவதாக ஏற்கனவே செல்வபிரியா தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து செல்வபிரியா விசாரணைக்காக குடும்பத்துடன் மகளிர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மேலும் காவல்துறையினர் செல்வபிரியா கொடுத்த புகாரை இதுவரையிலும் வழக்குபதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனையறிந்த செல்வபிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்வபிரியா தரையில் உருண்டு போராட்டம் நடத்தியாதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற துணை சூப்பிரண்டு அதிகாரி பால்சுதிர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |