Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே…. மினிமம் பேலன்ஸ் கட்டணம் திடீர் உயர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி மினிமம் பேலன்ஸ் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் பேங்க் லாக்கர் கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய கட்டணங்கள் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மெட்ரோ நகரங்களில் காலாண்டு சராசரி பேலன்ஸ் பராமரிப்பதற்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பதற்கான கட்டணத்தொகை ஒரு காலாண்டுக்கு 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதனைப்போலவே நகரங்களுக்கும் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வங்கி லாக்கர் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி கிராமப்புறங்கள், நகர்புறங்களில் சிறிய லாக்கருக்கு 1250 ரூபாய், நடுத்தர லாக்கருக்கு 2500 ரூபாய், பெரிய லாக்கருக்கு 3000 ரூபாய், மிகப்பெரிய லாக்கருக்கு rs.6000, மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களின் சிறிய லாக்கருக்கு 2000 ரூபாய், நடுத்தர லாக்கருக்கு 3,500 ரூபாய், பெரிய லாக்கருக்கு 5500 ரூபாய், மிகப்பெரிய லாக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |