தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தில் கஸ்தூரிராஜா சொன்னது சரி என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா இருவரும் விவாகரத்து பெறவில்லை எனவும் சாதாரண குடும்பத் தகராறு தான் எனவும் ஏற்கனவே கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தனுஷ் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாகவும் எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் என கூறி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று எனவும், விரைவில் இருவரும் வாழ்வில் இணைந்து விடுவார் எனவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்த பிறகும் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை இப்போது வரை நீக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.