முகக்கவசம் அணியாத 637 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் அபராதம் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் போது இடங்களில் சுற்றித்திரிந்த 637 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 400 அபராதம் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து முகக்கவசம் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.