Categories
அரசியல்

“முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கி!”….. உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த முல்லைவேந்தன்….!!!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுகவை சேர்ந்த முல்லைவேந்தன் முன்வைத்துள்ளார்.

தருமபுரி மாவட்ட அரசியலில் அஸ்திவாரம் என்று கூறப்படும் முக்கியமான நபர்களில் ஒருவர் முல்லைவேந்தன். இவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கினாலும் பின்னர் அரசியலில் குதித்து பல காட்சிகள் மாறி தற்போது அரசியலில் ஒரு நீங்கா இடம் பெற்றுள்ளார். முதன்முதலாக அதிமுகவில் தனது பயணத்தை தொடங்கிய முல்லைவேந்தன். பின்னர் திமுகவில் இணைந்தார். அங்கு அவர் மாவட்ட செயலாளராக திகழ்ந்தார். பின்னர் மொரப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வியைத் அடைந்ததற்கான சரியான காரணத்தை கேட்டு கட்சித் தலைமை அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அதற்கு அவர் முறையான விளக்கம் அளிக்காததால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது தாய் கழகமான அதிமுகவில் இருந்து வரும் அவர் கடந்த தேர்தலை ஒட்டி தர்மபுரி தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென பம்பரமாக சுழன்று பணிபுரிந்தார். இதன் பலனாக அதிமுக பாமக கூட்டணி தருமபுரி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இவர் பேசப்பட்டார். தற்போது தர்மபுரி பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முல்லைவேந்தன் கே.பி அன்பழகன் வீட்டில் நடந்த இலஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அதிமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற மாபெரும் ஊழலை மறைப்பதற்காகவே முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 5000 ரூபாய் பரிசு கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

மேலும் கல்விக் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி போன்ற வாய்க்கு வந்த அறிவிப்புகளை எல்லாம் கூறி மக்களை ஏமாற்றி குறுக்குவழியில் ஆட்சியை பிடித்துள்ளார். இதனைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய உடன் மக்களை திசை திருப்பவே இந்த லஞ்ச ஒழிப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்கெல்லாம் அதிமுகவினர் பயந்து விட மாட்டோம்..! ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை அவரை விடவும் மாட்டோம்.!” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |