Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 லிட்டர் எரி சாராயம்…… வீட்டுக்குள் கள்ள தொழில்…… உரிமையாளர் கைது….!!

திருப்பூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட செந்நெறி புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராயம் பதிக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழு பொள்ளாச்சி மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 10 லிட்டர் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்ததுடன் வீட்டின் உரிமையாளர் தமிழ்முரசு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான எரி சாராயம் விற்கும் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |